Tuesday, July 12, 2005

முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"

முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"

முன்னூட்டிய பின்னூட்டத்திலே நான் விட்ட நகைச்சு வையை எடுத்துவிட்டுப் பார்த்தால், எருமையின் முதுகிலே மழை கொட்டுகிறாயா கொட்டிவிட்டுப்போனால் போகட்டுமென்பதே என் அபிப்பிராயம். எல். எல். தாஸுடன் எனக்கு ஒப்புக்கொள்ளுமளவுக்கு விடயங்கள் பல இல்லை; டோண்டு ஐயாவுடனும் குறைவே. முகமூடிச்சுதந்திரம் தேவை என நின்று சொல்லும் அதே நேரத்திலே, இப்படியாக தாஸ், டோண்டு அவர்களின் பெயர்களிலே, அவர்கள்தான் என்ற விதத்திலே மற்றவர்களுக்குத் தோன்றவேண்டுமென்று திட்டமிட்டுப் பொய்யூட்டமிடுவது ("கெட்டவிதமாகப் பேசாமல், நல்ல முறையிலே ஒரு முகமூடி பேசுவார் என்றாலுங்கூட" பிழையானதே.
அதே நேரத்திலே, இதற்காகத் தொடர்ந்து கத்திக்கொண்டிருப்பதும் கத்தி கொண்டிருப்பதும் உண்மையிலே பெயர்கொண்டவர்களுக்குத்தான் சேதமானது.
புளொக்கரிலே, இப்போது, பதிவு நிர்வாகியே சுவடு தெரியாமல் அழிக்கும் உரிமை வந்திருப்பதாகத் தெரிவது, இப்படியான ஆள்மாறாட்டிகளுக்குச் சோர்வினைத் தரக்கூடும். (நாள் முழுக்கச் செய்யும் உழைப்பு வீணாகின்றதே!)ஆனால், இது புளொக்கரிலே பதிகின்றவர் தன் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துச் சொல்லினால், அதை அப்படியே சொல்லியிருக்கக்கூடுமென்ற தடயத்தினைக்கூட அழித்துவிடக்கூடிய ஒரு சர்வாதிகாரத்தினைப் பதிவு நிர்வாகிக்குக் கொடுக்கின்றது.

இப்படியாகத் தன் கருத்து அழிக்கப்பட்டுவிடுமென்று கருதுகின்றவர், டோண்டு ஐயா செய்வதுபோல தனது பதிவிலும் அதே பின்னூட்டக் கருத்தினைப் போட்டுவிடுவது நல்லது. (அவர் பின்னால், தன் பதிவிலே தன்னிஷ்டப்படி மாற்றிவிடுவார் என்று பயப்படும் முன்னவர், அடுத்தமுறை அழிக்க அஞ்சுவார்). மனிதன் போன்ற "மகளிர் மாத்திரம்" வசனநடைகைவந்த வல்லாளர்களுக்குத்தான் திருடனுக்குத் தேள்கொட்டிய நிலை. தன் பதிவிலும் இடமுடியாது. பின்னூட்டம் இட்ட இடத்திலே அழித்தாலும், ஏதும் செய்யமுடியாது. இரட்டை வேலைதான் ஆனால், இது பயனானது.

2 Comments:

Blogger முகமூடி said...

உங்கள் கருத்தை தனிப்பதிவாக போடுவது என்ற முடிவு சரிதான்... ஆனால் ப்ரச்னை என்னவென்றால், பின்னூட்டம் இடுபவர் பின்னர் வந்து தன் கருத்தை - தடயமே இல்லாமல் - அழிக்கிறார் என்று கொள்வோம்... அதற்கு என்ன செய்வது... மற்றவர் கருத்தையுமா தம் பதிவில் போட முடியும்...(தடயமே இல்லாமல் எப்படி அழிக்க இயலுமென்பதை பற்றி இனிதான் ஆராய வேண்டும்) வேண்டுமானால் முன்னர் வந்த பின்னூட்டத்துக்கு பதிலளிக்கும்போது அந்த பின்னூட்டத்தை அப்படியே மறுபதிப்பு செய்தால் - நீளம் கூடும் என்றாலும் - அது பயனளிக்கும்.

நானும் செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறேன்

1:51 PM  
Blogger -/பெயரிலி. said...

நல்லது.
அதிலே பின்னூட்டமாக எதையும் விடாதிருப்பதும் நல்லதென்றே படுகின்றது. இல்லாவிட்டால், இந்தப்பதிவுப்பின்னூட்டத்துக்கு இன்னொரு பின்னூட்டப்பதிவு பொருந்தவேண்டியதாகப் போகும்

;-))

2:06 PM  

Post a Comment

<< Home