Tuesday, July 12, 2005

காவலன்- G U A R D

Tuesday, July 12, 2005
"இந்தியாவும் வான்புலிகளும்" எனது கருத்து ...

/"இன்றும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் ஒருபகுதி ஈழதமிழர்களின் கையிலேயே இருக்கிறது"/
???
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டினை விடுமுறைக்காகப் பயன்படுத்துவதையும் (குறிப்பாக, கோவில், சீலை போன்ற சங்கதிகளில்) ஈழத்தமிழர்கள் கோடம்பாக்கத்துப்படங்களுக்குச் செலவு செய்வதினையும் எதிர்ப்பவன் என்றபோதுங்கூட, மேற்படிக்கூற்று நிறையவே உண்மைக்கு அப்பாலானதென்றே நினைக்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளிலே வேலை பார்ப்போர் அனுப்பும் தொகையிலும்விட, ஈழத்தமிழர் தமிழ்நாட்டிலே அதிகம் செலவழிப்பாரென்று எண்ணவில்லை.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கையிருப்பு எப்படியாக இந்து ராம், சோ, மணிரத்தினம் வகையறாக்களை நம்பும் பேர்வழிகளிடம் ஒரு சதமாகவேனும் போய்ச்சேரக்கூடாதென்று விரும்புகிறேனோ, அதே போலவே உண்மையையும் நாங்கள் உண்மையாகச் சொல்லவேண்டும். திரைப்படத்தின் ஒரு பகுதி வருமானம் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து (ஈழத்தவர் + தமிழ்நாட்டுத்தமிழர்) வருகின்றதென்பது உண்மைதானென்றாலுங்கூட, அது தமிழ்நாட்டிலிருந்து வருவதோடு ஒப்பிடமுடியுமா?

உண்மைக்கு மாறானதைப் பிழையென நிறுவும்போது, நாமும் ஆதாரங்களுடன் சரியானதைப் பேசவேண்டுமென நினைக்கிறேன்.

ஆனால், நிச்சயமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் விடுமுறைக்கும் பண்பாட்டு தேடியும் தமிழ்நாட்டுக்குப் போவதையும் செலவு செய்வதையும் சோ, ராம், ஜெயலலிதா, மணிரத்தினம், பாலசந்தர் போன்ற ஆசாமிகளை எண்ணியேனும் தவிர்க்கவேண்டுமென்பது என் அவா. ஆனால், ஒவ்வொருவருக்கும் தனக்குத்தனக்கு என்ன வேண்டுமென்ற ஆசையும் தேவையும் இருக்கின்றதல்லவா?