Tuesday, July 19, 2005

போட்டுத்தாக்கு

ஸ்பிரிட்டட் அவே: -/பெயரிலி. Says:
July 20th, 2005 at 2:20 am
விஜய்,
பார்வை மெய்யப்பன் ஸ்பிரிட்டட் எவே குறித்து எழுதியபின்னாலேதான், மியாசாக்கியின் சில படங்களைத் தேடி எடுத்துப் பார்த்தேன். இயக்குநர் மியாசாக்கியின் படங்களைக் கவனித்தால் பொதுவாக சுற்றாடல் குறித்து அவர் மிகவும் ஈடுபாடுகொண்டிருப்பது தெரியும். இந்தப்படத்திலே ஆறு குறித்துச் சொல்வார்; Princess Mononoke இலே காடு குறித்தும் விலங்குகள் குறித்தும்; My Neighbor Totoro இலே காடு குறித்து; Kiki’s Delivery Service இலே விலங்குகள், பூச்சிகள் குறித்து (இப்படத்திலே Spirited Away இன் சாயல் தெரியும்); Castle in the Sky இலே ஆகாயம், மரங்கள் குறித்து.

இவருடைய உயிர்ப்பூட்டப்பட்ட கதாபாத்திரங்களைப் பார்த்தீர்களென்றால், முழுக்க முழுக்க நல்லவர்களுமில்லை கெட்டவர்களுமில்லை என்ற விதத்திலே அமைந்திருப்பார்கள். இந்த விடயம், அமெரிக்கச்சித்திரங்களின் பாத்திரச்சித்தரிப்புக்கு முரணானதாகும். அமெரிக்கச்சித்திரங்களிலே, நல்லது.எதிர்.கெட்டது (Good.Vs.Evil) என்ற முரண்தன்மை சுட்டப்பட்டுக்கொண்டேயிருக்கும் (கிட்டத்தட்ட, இத்தன்மையே புஷ் போன்ற ஜனாதிபதிகளின் உலகப்பார்வையை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்ததுவோ தெரியாது).

இவர் படங்களின் இன்னொரு மிகவும் முக்கியமான அம்சம், குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள்; அமெரிக்க உயிர்ப்பூட்டுச்சித்திரங்களிலே வருவதுபோல பெரும்போதனைகளைச் செய்வதில்லை. இந்த விதத்திலே இவரின் குழந்தைப்பாத்திரங்கள், முன்னைய கிழக்கு ஐரோப்பிய+சோவியத்து உயிர்ப்பூட்டுசித்திரங்களின் குழந்தைகளின் தன்மை கொண்டவை.

இந்த ஆண்டு, இவர் ஓர் ஆங்கிலக்கதையை வைத்து எடுத்த படம் ஆங்கிலத்திலே வந்திருக்கின்றது. Howl’s Moving Castle