Tuesday, July 19, 2005

Prakash's Chronicle

Prakash's Chronicle: ஷங்கர் என்கிற சமூக விஞ்ஞானி. : 12:24 AM, -/பெயரிலி. said...
/நானே அதை இணையத்தில், யாரோ எழுதிய கட்டுரையில் இருந்துதான் சுட்டேன். யார் என்று நினைவில்லை./செந்நாய் ப்ரோ, இதுக்கு எம். ஆர். ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டதே பரவாயில்லங் காணும். உங்க ஹொலிய தான் தௌ தலைவரை எணையபதிவி ஒருத்தரு தன்னோட ஈகோ ட்ரிப் ஒண்ணிலே சுட்டப்ப 1997 இல எழுதிருக்காருன்னு நெனைக்குறேன். ;-)-/Self-Linking Post (TamiL) DoG.

போட்டுத்தாக்கு

ஸ்பிரிட்டட் அவே: -/பெயரிலி. Says:
July 20th, 2005 at 2:20 am
விஜய்,
பார்வை மெய்யப்பன் ஸ்பிரிட்டட் எவே குறித்து எழுதியபின்னாலேதான், மியாசாக்கியின் சில படங்களைத் தேடி எடுத்துப் பார்த்தேன். இயக்குநர் மியாசாக்கியின் படங்களைக் கவனித்தால் பொதுவாக சுற்றாடல் குறித்து அவர் மிகவும் ஈடுபாடுகொண்டிருப்பது தெரியும். இந்தப்படத்திலே ஆறு குறித்துச் சொல்வார்; Princess Mononoke இலே காடு குறித்தும் விலங்குகள் குறித்தும்; My Neighbor Totoro இலே காடு குறித்து; Kiki’s Delivery Service இலே விலங்குகள், பூச்சிகள் குறித்து (இப்படத்திலே Spirited Away இன் சாயல் தெரியும்); Castle in the Sky இலே ஆகாயம், மரங்கள் குறித்து.

இவருடைய உயிர்ப்பூட்டப்பட்ட கதாபாத்திரங்களைப் பார்த்தீர்களென்றால், முழுக்க முழுக்க நல்லவர்களுமில்லை கெட்டவர்களுமில்லை என்ற விதத்திலே அமைந்திருப்பார்கள். இந்த விடயம், அமெரிக்கச்சித்திரங்களின் பாத்திரச்சித்தரிப்புக்கு முரணானதாகும். அமெரிக்கச்சித்திரங்களிலே, நல்லது.எதிர்.கெட்டது (Good.Vs.Evil) என்ற முரண்தன்மை சுட்டப்பட்டுக்கொண்டேயிருக்கும் (கிட்டத்தட்ட, இத்தன்மையே புஷ் போன்ற ஜனாதிபதிகளின் உலகப்பார்வையை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்ததுவோ தெரியாது).

இவர் படங்களின் இன்னொரு மிகவும் முக்கியமான அம்சம், குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள்; அமெரிக்க உயிர்ப்பூட்டுச்சித்திரங்களிலே வருவதுபோல பெரும்போதனைகளைச் செய்வதில்லை. இந்த விதத்திலே இவரின் குழந்தைப்பாத்திரங்கள், முன்னைய கிழக்கு ஐரோப்பிய+சோவியத்து உயிர்ப்பூட்டுசித்திரங்களின் குழந்தைகளின் தன்மை கொண்டவை.

இந்த ஆண்டு, இவர் ஓர் ஆங்கிலக்கதையை வைத்து எடுத்த படம் ஆங்கிலத்திலே வந்திருக்கின்றது. Howl’s Moving Castle

Sunday, July 17, 2005

காட்சியும், கனவும், எழுத்தும்

போட்டுத்தாக்கு

போட்டுத்தாக்கு: அம்மா செத்ததுக்கே அழல : -/பெயரிலி. Says:
July 18th, 2005 at 11:23 am
நல்ல பதிவு

மனம் ஒரு குரங்கு

Sunday, July 17, 2005
"வலைப்பதிவுகளைத் தவிருங்கள்" - சுஜாதா
-/பெயரிலி. said...
/'name-dropping' இல்லாத சுஜாதா கட்டுரையைக் கண்டுபிடிப்பதற்குள், 'bird-dropping' இல்லாத நேரு சிலையைக் கண்டுபிடித்து விடலாம். /

;-)))

July 17, 2005 11:42 AM

Thursday, July 14, 2005

DISPASSIONATED DJ

DISPASSIONATED DJ: Tuesday, July 12, 2005: call கேட்டாலும் விளக்குவேன்
web பங்குச் சால் ஆலும் விளக்குவேன் ;-)

By -/பெயரிலி., at July 14, 2005 10:03 PM

KANNOTTAM - கண்ணோட்டம்

இன்குலாப், காசிஆனந்தன், வைரமுத்து
At 6:52 PM, -/பெயரிலி. said...
இன்குலாப் பற்றித் தங்கமணி சொல்வதும் சாத்தியமானதே. வைரமுத்து எதையும் எழுதிவிட்டுப்போகட்டும். அது நல்லதா கெட்டதா, பிடித்ததா பிடிக்காததா என்பதெல்லாம் தனியாள் சம்பந்தப்பட்ட சங்கதி. ஆனால், அவருடைய தமிழ் குறித்த அலட்டல்களும் தன்னை முன்னிலைப்படுத்துதலும் தாங்கிக்கொள்ளமுடியவில்லை (வலைப்பதிலே பதியும் எங்கள் அலட்டல்களே பரவாயில்லை என்ற அளவுக்கு). அதேநேரத்திலே, இன்குலாபினையும் காசி ஆனந்தனையும் அவர்களின் ஈழநிலைப்பாடு தெரிந்தநிலையிலும் இந்தியாவிலே பரிசு கொடுக்க அவர் தேர்ந்தெடுத்தது ஒரு வகையிலே துணிச்சல்தான் என்றும் தோன்றுகிறது.

DISPASSIONATED DJ

DISPASSIONATED DJ
Tuesday, July 12, 2005
பெயரிலி பத்தாம் வகுப்புக்குப் பிறகு யாருக்கு எல்லாம் தேமாப்பூ ஆய்ந்து கொடுத்தனீங்கள் :-)?/கேட்டானே ஒரு கேள்வி; நான் வார்த்தையில் பதில் சொல்லமுடியாது
By -/பெயரிலி., at July 14, 2005 2:58 PM


/பெயரிலி அவர்கள் விளக்குவார்./ வேப்பங்குச்சாலா? கோல்கேட்டாலா?
By -/பெயரிலி., at July 14, 2005 7:04 PM

Karthik�s Nothing but Blogs - தினசரிமாலைத்தோழன்

Karthik�s Nothing but Blogs - Blog Archive � தினசரிமாலைத்தோழன்: ஆண்டி-ஆட்டு மினிஸ்ரர் says:
July 14th, 2005 at 7:53 pm

டிசே பூ வைக்கிறாரெண்டவுடனை ஒரு படிமேலை போய், மாலை போடுறீர் என்ன?

தமிழ்மணம்- மன்றம்: .:டைனோ:. குறிப்பு

தமிழ்மணம்-மன்றம் பகுதியிலே .:டைனோ:. இட்ட கீழ்வரும் குறிப்புக்கான என் பதிவு.

dyno எழுதியது: வியாழன் ஜூலை 14, 2005 9:45 am அஞ்சலின் பொருள்: வலைப்பதிவர்களின் கவனத்திற்கு!

--------------------------------------------------------------------------------

அன்பு பதிவர்களே!

வலைப்பதிவு இடும் உங்கள் நேரம் எத்தனை பொன்னானதோ அதைப்போலவே மறுமொழியிடும் என்னைப்போன்ற வாசகர்களின் நேரத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். போலி பின்னூட்டங்களையோ, ஆபாச பின்னூட்டங்களையோ நீக்குவது நீக்காதது அவரவர் விருப்பம். ஆனால் கண்ணியமான முறையில் உங்கள் கருத்திற்கு மாற்றாக இடப்படும் பின்னூட்டங்களை நீக்கும் போது பின்னூட்டமிட்டவருக்கு அதைப்பற்றி தெரிவிக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரீகத்தை கடைபிடிக்கவேண்டும். நேரமிருப்பின் அதை நீக்கியதிற்கான காரணத்தையும் குறிப்பிடல் இன்னும் சிறப்பு.

ப்ளாக்கர் பதிவுகளில் பின்னூட்டம் நீக்கப்பட்டால் அந்த இடத்தில் நீக்கப்பட்டது என்ற அறிவிப்பாவது இருக்கும். ஆனால் வோர்ட் பிரஸ் போன்ற செயலிகளை பாவிப்பவர்களுக்கு அந்த வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை. அதனால் அச்செயலிகளை உபயோகிக்கும் பதிவர்கள் பின்னூட்டம் நீக்கப்பட்டால் அதை அறிவிக்க வேண்டியது நாகரீகமான செயலாக இருக்கும்.

இந்த குறைந்தபட்ச நாகரீகத்தைகூட உங்களிடம் எதிர்பார்ப்பது தவறெனில் தாமரைத்தண்டின் உயரம் தண்ணீறளவே!


.:டைனோ:.

------------
என்னுடைய இந்தப்பதில் தமிழ்மணம்-மன்றத்தின் நோக்குக்கும் எல்லைக்கும் அடங்கக்கூடியதில்லை என்பதால், இங்கே பதிவு செய்திருக்கின்றேன்.

/தாமரைத்தண்டின் உயரம் தண்ணீறளவே!/

நான் வேர்ட்ப்ரஸ் பயன்படுத்துவதில்லை என்றபோதுங்கூட, இந்தச்சொற்றொடர் ஒத்த சொற்றொடரை -/பெயரிலி. ஆகிய நானும் பயன்படுத்தி, சந்தர்ப்பவசமாக .:டைனோ:. உம் என்னுடைய [u]அலைஞனின் அலைகள்: குவியம் - முகமூடிகளின் வருகை[/u] [url]http://wandererwaves.blogspot.com/2005/07/blog-post_13.html [/url] பதிவிலே நேற்று பின்னூட்டமிட்டிருப்பதால், மேலிருக்கும் .:டைனோ:. இன் வேண்டுகோள், சிலருக்கு .:டைனோ:. இன் பின்னூட்டம் எதையாவது நான் மேற்கூறிய என் முகமூடிகளின் வருகை பதிவிலே அழித்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தினைத் தரலாம்.

அப்படியாக எந்தவிதமான அழித்தல் ஒழித்தல் ஆகிய நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை (நான் வேறு சில என் பதிவுகளிலே நீக்கிய, மனிதன் என்ற பெயரின் கீழ் வந்த "ஆ!பாச"ப்பின்னூட்டங்கள் இட்டவர் .:டைனோ:. இல்லை என்ற நம்பிக்கையிலே எழுதுகிறேன்) என்று இத்தால் உறுதியளிக்கின்றேன்.

Domesticated Onion

Domesticated Onion: கனடாவும் வெடிகுண்டு சாத்தியமும்[12] சொன்னவர்: Ramanitharan Kandiahinspired by venkat — #3 inspired by karthikramas — #6 கறுப்பிக்கு அந்தளவு பயமிருக்கிறது என்பதை எண்ணிச் சந்தோஷ்மாக இருக்கிறது

reply to this comment Thursday, 14.07.05, 09:50:50

சித்தன் கொட்டில்:

கலீல் கிப்ரானும்( Khalil Gibran) செங்கள்ளுச் சித்தனும் : "இடுக்கியில் இருந்து நெருப்பில் விழுந்தேன்" என்று முடிக்கலாம் என்றிருந்தேன்.பின்
"பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது" என்று எழுதிவைக்கலாமா என்று யோசித்துப் பின் எதையும் எழுதாமல் விட்டு விட்டேன்!/

இராமற்றை வில்லை ஆர் உடைச்சாத்தான் உங்களுக்கென்ன, நீங்கள் போனமா வந்தமா எண்டு உங்கட வேலையைப் பாத்திட்டு வந்திருக்கலாமெண்டு சொல்லுறன்

By -/பெயரிலி., at July 14, 2005 11:26 AM

Wednesday, July 13, 2005

DISPASSIONATED DJ: Tuesday, July 12, 2005

DISPASSIONATED DJ: /அடுத்து தேமாபூக்களை இந்துக்கோவிலில்
பயன்படுத்துவார்கள் என்று எனது மனைவி சொல்கிறார்/
ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரைக்கும் கோயிலுக்குக் காலமைகளிலை நான் ஆய்ந்து கொடுத்துக்கொண்டிருந்தன் (நித்தியகல்யாணி, அலரி, திருவாதிரி, நந்தியாவட்டை உட்பட தேமாவும் அதுவும் அந்த ஓரத்தால, செவ்வரியோடிய தேமா). பூசைமுடிஞ்சு பூத்தட்டத்தில பூ தருகிறபோதுகூட வரும்

By -/பெயரிலி., at July 14, 2005 12:47 AM

கணிதம்: ஒரு பைத்தியம் நிலா பார்க்கிறது*

ஒரு பைத்தியம் நிலா பார்க்கிறது* : At 12:28 AM, July 14, 2005, -/பெயரிலி. said...
நல்லாக எழுதியிருக்கின்றீர்கள்

சித்தன் கொட்டில்

சாகர அலை

சாகர அலை - SV-771: At 4:06 AM,
(13.7.2005) -/பெயரிலி. said...

வாசிக்க சுவையாகவிருந்தது. நன்றி.

Kavithai: இரண்டு தகவல்கள்

Kavithai: இரண்டு தகவல்கள்: பயணம் பத்திரம் ;-)

இந்தப் பாடலைக் கேட்கமுன்னமே ஆரம்ப இசை I Just Called To Say I Love You என்ற Steve Wonder இன் பாடலின் தொடக்க இசையை எப்போதும் எனக்கு ஞாபகப்படுத்துகின்றதே தமிழா! ;-)

Posted by: -/பெயரிலி. at July 13, 2005 04:57 PM
பயணம் பத்திரம் ;-)

இந்தப் பாடலைக் கேட்கமுன்னமே ஆரம்ப இசை I Just Called To Say I Love You என்ற Steve Wonder இன் பாடலின் http://www.amazon.com/exec/obidos/clipserve/B00006JSS8001019/1/002-7340925-7055252 தொடக்க இசையை எப்போதும் எனக்கு ஞாபகப்படுத்துகின்றதே தமிழா! ;-)

Posted by: -/பெயரிலி. at July 13, 2005 04:58 PM

Tuesday, July 12, 2005

காவலன்- G U A R D

Tuesday, July 12, 2005
"இந்தியாவும் வான்புலிகளும்" எனது கருத்து ...

/"இன்றும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் ஒருபகுதி ஈழதமிழர்களின் கையிலேயே இருக்கிறது"/
???
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டினை விடுமுறைக்காகப் பயன்படுத்துவதையும் (குறிப்பாக, கோவில், சீலை போன்ற சங்கதிகளில்) ஈழத்தமிழர்கள் கோடம்பாக்கத்துப்படங்களுக்குச் செலவு செய்வதினையும் எதிர்ப்பவன் என்றபோதுங்கூட, மேற்படிக்கூற்று நிறையவே உண்மைக்கு அப்பாலானதென்றே நினைக்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளிலே வேலை பார்ப்போர் அனுப்பும் தொகையிலும்விட, ஈழத்தமிழர் தமிழ்நாட்டிலே அதிகம் செலவழிப்பாரென்று எண்ணவில்லை.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கையிருப்பு எப்படியாக இந்து ராம், சோ, மணிரத்தினம் வகையறாக்களை நம்பும் பேர்வழிகளிடம் ஒரு சதமாகவேனும் போய்ச்சேரக்கூடாதென்று விரும்புகிறேனோ, அதே போலவே உண்மையையும் நாங்கள் உண்மையாகச் சொல்லவேண்டும். திரைப்படத்தின் ஒரு பகுதி வருமானம் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து (ஈழத்தவர் + தமிழ்நாட்டுத்தமிழர்) வருகின்றதென்பது உண்மைதானென்றாலுங்கூட, அது தமிழ்நாட்டிலிருந்து வருவதோடு ஒப்பிடமுடியுமா?

உண்மைக்கு மாறானதைப் பிழையென நிறுவும்போது, நாமும் ஆதாரங்களுடன் சரியானதைப் பேசவேண்டுமென நினைக்கிறேன்.

ஆனால், நிச்சயமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் விடுமுறைக்கும் பண்பாட்டு தேடியும் தமிழ்நாட்டுக்குப் போவதையும் செலவு செய்வதையும் சோ, ராம், ஜெயலலிதா, மணிரத்தினம், பாலசந்தர் போன்ற ஆசாமிகளை எண்ணியேனும் தவிர்க்கவேண்டுமென்பது என் அவா. ஆனால், ஒவ்வொருவருக்கும் தனக்குத்தனக்கு என்ன வேண்டுமென்ற ஆசையும் தேவையும் இருக்கின்றதல்லவா?

Anand Pictures: புகைபடங்கள்

Anand Pictures: லாஸ் வேகஸ்: "-/பெயரிலி. said...
படக்கருவியின் தேர்வுநிலையுடன் நீங்கள் படங்களைத் தருவது பயனாகவிருக்கின்றது"

என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ்

தமிழ்மணம் - சில குறிப்புகள்: -/பெயரிலி. says:

/மறுமொழி எண்ணிக்கை வசதி நீக்கப் படும்./
எனக்கு இன்று 2115 மறுமொழிகள் வந்த பொறாமையிலே நீங்கள் இப்படியாகச் செய்வது புரிகின்றது. பொறாமைபிடித்தவர்கள்!!

மிகுதிப்படி, இந்தக்குறிப்பினை நீங்கள் இன்றைக்கு மட்டும் போட்டால், போதாது. மாதாமாதமோ கிழமைக்குக் கிழமையோ போட்டுக்கொண்டிருக்கவேண்டுமென்பதே நிதர்சனமெனத் தோன்றுகிறது.

July 12th, 2005 at 11:21 pm

சித்தன் கொட்டில்

Karthik's Nothing but Blogs

Karthik's Nothing but Blogs: "ஆண்டி-ஆட்டு மினிஸ்ரர் says:
July 12th, 2005 at 5:16 pm

ஆஹா! -/பெயரிலி. சாக முன்னாலேயே மினிமான் -/பேயிலியா? கய்த, கூவத்துச்சாக்கட, அது -/பெயரிலி.
-/பெயரிலி இல்ல.

இதுலயாச்சும் டோண்டு ஐயா வழியிலே நானும் போகிறேன். -/பெயரிலி.யின் ஒரிஜினல் பின்னூட்டத்தைக் கண்டு களிக்க, என்னிக்கும் அணுகவேண்டியது இங்கே. இன்று முதல் குதூகல ஆரம்பம். அக்மார்க் -/பெயரிலி.பின்னூட்டம் அசலா நகலா என்று இங்கே உரசிப்பார்த்து பேஷ் பேஷ்ன்னு வாங்குங்கள். அல்லது பேந்தப்பேந்த விழியுங்கள்.

;-) "

முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"

@ July 12, 2005 1:58 PM க்கு நம்ம -/பெயரிலி. சொல்றது என்னன்னா:
/இப்போது ப்ரச்னை என்னவென்றால், பின்னூட்டம் இடுபவர் பின்னர் வந்து தன் கருத்தை - தடயமே இல்லாமல் - அழிக்கிறார் என்று கொள்வோம்... அதற்கு என்ன செய்வது... மற்றவர் கருத்தையுமா தம் பதிவில் போட முடியும்...(தடயமே இல்லாமல் எப்படி அழிக்க இயலுமென்பதை பற்றி இனிதான் ஆராய வேண்டும்) /

அப்படியாக அழித்தால், இன்னமும்
XXXXX said...
This post has been removed by the author.
இப்படியாகத்தான் தெரிகிறது.

முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"

முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"

முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"

முன்னூட்டிய பின்னூட்டத்திலே நான் விட்ட நகைச்சு வையை எடுத்துவிட்டுப் பார்த்தால், எருமையின் முதுகிலே மழை கொட்டுகிறாயா கொட்டிவிட்டுப்போனால் போகட்டுமென்பதே என் அபிப்பிராயம். எல். எல். தாஸுடன் எனக்கு ஒப்புக்கொள்ளுமளவுக்கு விடயங்கள் பல இல்லை; டோண்டு ஐயாவுடனும் குறைவே. முகமூடிச்சுதந்திரம் தேவை என நின்று சொல்லும் அதே நேரத்திலே, இப்படியாக தாஸ், டோண்டு அவர்களின் பெயர்களிலே, அவர்கள்தான் என்ற விதத்திலே மற்றவர்களுக்குத் தோன்றவேண்டுமென்று திட்டமிட்டுப் பொய்யூட்டமிடுவது ("கெட்டவிதமாகப் பேசாமல், நல்ல முறையிலே ஒரு முகமூடி பேசுவார் என்றாலுங்கூட" பிழையானதே.
அதே நேரத்திலே, இதற்காகத் தொடர்ந்து கத்திக்கொண்டிருப்பதும் கத்தி கொண்டிருப்பதும் உண்மையிலே பெயர்கொண்டவர்களுக்குத்தான் சேதமானது.
புளொக்கரிலே, இப்போது, பதிவு நிர்வாகியே சுவடு தெரியாமல் அழிக்கும் உரிமை வந்திருப்பதாகத் தெரிவது, இப்படியான ஆள்மாறாட்டிகளுக்குச் சோர்வினைத் தரக்கூடும். (நாள் முழுக்கச் செய்யும் உழைப்பு வீணாகின்றதே!)ஆனால், இது புளொக்கரிலே பதிகின்றவர் தன் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துச் சொல்லினால், அதை அப்படியே சொல்லியிருக்கக்கூடுமென்ற தடயத்தினைக்கூட அழித்துவிடக்கூடிய ஒரு சர்வாதிகாரத்தினைப் பதிவு நிர்வாகிக்குக் கொடுக்கின்றது.

இப்படியாகத் தன் கருத்து அழிக்கப்பட்டுவிடுமென்று கருதுகின்றவர், டோண்டு ஐயா செய்வதுபோல தனது பதிவிலும் அதே பின்னூட்டக் கருத்தினைப் போட்டுவிடுவது நல்லது. (அவர் பின்னால், தன் பதிவிலே தன்னிஷ்டப்படி மாற்றிவிடுவார் என்று பயப்படும் முன்னவர், அடுத்தமுறை அழிக்க அஞ்சுவார்). மனிதன் போன்ற "மகளிர் மாத்திரம்" வசனநடைகைவந்த வல்லாளர்களுக்குத்தான் திருடனுக்குத் தேள்கொட்டிய நிலை. தன் பதிவிலும் இடமுடியாது. பின்னூட்டம் இட்ட இடத்திலே அழித்தாலும், ஏதும் செய்யமுடியாது. இரட்டை வேலைதான் ஆனால், இது பயனானது.